கோலாலம்பூர், 24 செப்டம்பர் (பெர்னாமா) -- இவ்வட்டாரத்தில் அறிவார்ந்த சொத்துடைமை, ஐ.பி வகைகளில் ஒன்றான புவியியல் குறியீடுகள், ஜி.ஐ-யை அதிகமாகப் பதிவு செய்வதை உலக அறிவார்ந்த சொத்துடைமை அமைப்பு, WIPO உடன் இணைந்து ஆசியான் ஊக்குவிக்கும்.
புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கும், குறிப்பிட்ட வட்டாரங்களுக்கு தனித்துவமான உள்ளூர் பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், இது ஒரு சிறந்த முயற்சி என்று முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் லியூ சின் தோங் கூறினார்.
"எங்கள் முயற்சி அதிக மலேசிய அறிவார்ந்த சொத்துடைமை உருவாக்குவதாகும். அதிகமான ஐ.பி ஆசியான். ஏனென்றால், நாம் வெறும் ஓ.ஈ.எம்-கள் அல்ல. முன்னதாக, நாம் ஓ.ஈ.எம்-களாக இருந்தோம். அவர்களுக்கு ஒரு பெரிய நிறுவனம் இருக்கின்றது. நாம் அவர்களுக்கு பொருள்களை உற்பத்தி செய்கிறோம். அவர்களின் அடையாளத்தை பயன்படுத்துகின்றோம். ஆனால், நாம் வணிகம் அல்லது உற்பத்தி வேலைகளை மட்டுமே செய்கின்றோம். ஆனால், மலேசியாவிலும் தயாரிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்", என்றார் அவர்.
மலேசியா மற்றும் ஆசியான் மட்டங்களில் உள்ள அதிக அறிவார்ந்த சொத்துடைமைகளை உருவாக்கி பதிவு செய்வதற்கான முயற்சிகளுக்கு அதிக கவனம் செலுத்தி MyIPO போன்ற நிறுவனங்களின் மூலம் தற்போதுள்ள பதிவு முறையை விரிவுப்படுத்த மலேசியா தயாராக இருப்பதாக, லியூ கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)