லண்டன், 06 செப்டம்பர் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் போட்டியில், தேசிய ஆடவர் ஸ்குவாஷ் வீரர் ங் ஐன் யோவ், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இங்கிலாந்தின் மார்வான் எல்ஷோர்பேகிவுடன், ஐன் யோவ் விளையாடினார்.
லண்டன் அலெக்ஸாண்ட்ரா பேலஸ் அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், உபசரணை நாட்டின் எல்ஷோர்பேகி வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தி, 11-9, 11-9 என்ற புள்ளிகளில் ஐன் யோவ் வெற்றி பெற்று அரங்கில் இருந்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அரையிறுதி ஆட்டத்தில் அவர் நியூசிலாந்தின் பால் கோலுடன் மோதவுள்ளார்.
மகளிருக்கான பிரிவில் களமிறங்கிய நாட்டின் எஸ். சிவசங்கரியும் அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகினார்.
உபசரணை நாட்டின் ஜஸ்மின் ஹட்டனுடன் விளையாடிய அவர் 11-9, 11-5 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றார்.
இவர்களின் ஆட்டம் 20 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.
நடப்பு வெற்றியாளரான சிவசங்கரி, அரையிறுதி ஆட்டத்தில் எகிப்தின் அமினா ஒர்ஃபிவுடன் விளையாடவிருக்கிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)