Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

உள்ளூர் அரிசி விற்பனை சரிவு; துல்லியமான ஆய்வு செய்யப்படும்

06/09/2025 06:31 PM

கோத்தா பாரு, 06 செப்டம்பர் (பெர்னாமா) -- சந்தையில் தற்போது உள்ளூர் அரிசி விற்பனை சரிவு கண்டிருப்பதால் அது குறித்து விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு துல்லியமான ஆய்வை மேற்கொள்ளும்.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விலையுடன் ஒப்பிடும் போது, உள்நாட்டு அரிசியின் விலை அதிகம் வேறுபடாததால் இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.

''அரிசி தற்போது ஒரு பிரச்சனையாக உள்ளது. ஏனெனில் அது மிகவும் மலிவானது மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியுடன் போட்டி நிலவுகிறது. எனவே, இந்த அரிசி குறித்து நாங்கள் ஒரு ஆழமான ஆய்வை நடத்தி வருகிறோம். 26 ரிங்கிட் விலையில் விற்கப்படும்10 கிலோ கிராம் நமது (உள்ளூர்) அரிசி நன்றாக விற்பனையாகவில்லை என்பதே இதற்குக் காரணம்... உள்ளூர் விலையிலிருந்து வெகு தொலைவில் இல்லாத இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இருக்கும்போது... உள்ளூர் அரிசி மீண்டும் கைவிடப்படத் தொடங்கியுள்ளது. எனவே உள்ளூர் அரிசியை வாங்குவதற்கான ஒரு பிரச்சாரத்தை இப்போதே மேற்கொள்ள வேண்டும்,'' என்றார் அவர்.

சனிக்கிழமை, கோத்தா பாருவில், மடானி கிராம தத்தெடுப்பு நிகழ்ச்சியை தொடக்கி வைத்த பின்னர், முஹமட் சாபு செய்தியாளர்களிடம் பேசினார்.

மதிப்பாய்வு மேற்கொள்ளப்படும் வரை ஒரு கிலோ கிராம் உள்ளூர் வெள்ளை அரிசியின் விலை, இரண்டு ரிங்கிட் 60 சென்னுக்கு நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்ய, உள்ளூர் வெள்ளை அரிசியின் சில்லறை விலையை விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.

இதனிடையே, ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி கோழி முட்டைகளுக்கான உதவித் தொகை நிறுத்தப்பட்டாலும், சந்தையில் முட்டைகளின் விலை கட்டுப்பாட்டில் இருப்பதாக சாபு கூறினார்.

''இதுவரை விலை (முட்டை) கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. உணவு விவகாரத்தைப் பொறுத்தவரை, எல்லாம் முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. நாம் நிம்மதியாக இருக்கிறோம் என்று மட்டுமே சொல்ல முடியும்,'' என்று அவர் மேலும் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)