ஜம்மூ, 18 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த நிலச்சரிவில் குறைந்தது எழுவர் பலியானதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்குப் பின்னர், இச்சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது.
வெள்ளத்தினால் ஏற்பட்ட மண் சரிவுகள் மற்றும் பெருக்கெடுத்து ஓடிய நீரினால் வீடுகளும் மூழ்கின.
தற்போது, அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் சிலர் விமானம் மூலம் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படுவதாக ஜம்மு பிரதேச ஆணையர் குமார் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)