Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஆசியான் தலைவர் என்ற அடிப்படையில் டிரம்பிற்கு மலேசியா அழைப்பு விடுத்துள்ளது

04/10/2025 05:49 PM

சிப்பாங், 04 அக்டோபர் (பெர்னாமா) -- ஆசியான் அமைப்பில் அமெரிக்கா விவாத பங்காளியாக உள்ளதால், அதன் அதிபர் டோனல்ட் டிரம்பிற்கு, 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள, ஆசியான் தலைவர் என்ற அடிப்படையில் மலேசியா அழைப்பு விடுத்துள்ளது.

மலேசியா-அமெரிக்கா இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் டிரம்ப் அழைக்கப்படவில்லை என்றும், மாறாக அனைத்து தலைவர்களையும் அழைக்கும் ஆசியான் தலைவரின் பொறுப்புக்கு ஏற்ப இந்த அழைப்பு அமைந்திருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமாட் ஹசான் தெளிவுப்படுத்தியுள்ளார்.

“ஆசியான் தலைவர் என்ற முறையில், 46வது மற்றும் 47வது உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். முன்னதாக 46-வது மாநாடு. 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் 47-வது மாநாடு. எனவே இந்த அழைப்பு அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நபரை அழைக்க முடியாது, இந்த நபரை அழைக்க முடியாது என்பது முடியாது. ஆசியான் தலைவராக, மலேசியாவாக அல்ல,'' என்றார் அவர்.

வட்டாரத்தில் நிலைத்தன்மையைப் பேணுவதில் ஆசியான் அமல்படுத்தும் நடுநிலைமை கொள்கை முக்கிய பங்கு வகிப்பதாக முஹமாட் ஹசான் கூறினார்.

இந்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான்-அமெரிக்க உச்சநிலை மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள டிரம்பிற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாக அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்திருந்தார்.

47-வது ஆசியான் உச்சநிலை மாநாடு வரும் 26 தொடங்கி ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)