Ad Banner
Ad Banner
 பொது

வெள்ளத் தணிப்பு திட்டம் & KIGIP மேம்பாட்டிற்கு 40 கோடி ரிங்கிட்

04/10/2025 06:03 PM

தைப்பிங், 04 அக்டோபர் (பெர்னாமா) -- பேராக், வடக்கு பகுதியில் வெள்ளத் தணிப்பு திட்டம் மற்றும் கெரியான் ஒருங்கிணைந்த பசுமை தொழில்துறை பூங்கா, KIGIP-இன் மேம்பாடு ஆகியவற்றை செயல்படுத்துவதற்காக, சுமார் 40 கோடி ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீடு தேவைப்படுகின்றது.

மென்மையான நிலத்தைக் கொண்டிருப்பதாலும், வெள்ள அபாயத்தில் இருக்கும் தாழ்வான பகுதியில் அமைந்திருப்பதாலும், சைம் டாபி மூலம் தனியார் துறையால் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திட்டம் பல சவால்களை எதிர்கொள்வதாக, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் கூறினார்.

"எனவே, அவர்கள் திட்டத்தைச் செயல்படுத்த பரிந்துரைத்தனர். அவர்கள் லெவி முறையைச் செயல்படுத்துவர். அணை கட்டுவதற்கு லெவி முறை செயல்படுத்தப்படுகின்றது. ஆற்று நீர் நிரம்பி வழியாதவாறு அணையை உயர்த்த வேண்டும். ஆனால், நாங்கள் ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளும்போது, அது அந்த இடத்தின் ஒரு பகுதி]க்கு மட்டுமே தீர்வு காண முடிந்தது. முழுவதையும் அல்ல. அதனால்தான் இறுதியாக நடைபெற்ற பட்டறையிலிருந்து இந்தத் திட்டத்தை நாங்கள் பரிந்துரைக்கும் திட்டங்களுடன் இணைப்பது மிகவும் தகுந்ததாக இருந்தது. அதாவது சமகாகா ஆற்றில் உள்ள உள்ளூர் வெள்ளத் திட்டத்திற்கும், KIGIP-இல் என்ன நடக்கிறது என்பதோடு அதை இணைக்கிறோம்'' என்றார் அவர்.

இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தால், பேராக்கின் முழு வடக்கு பகுதி, அதாவது கெரியான் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கி ஒரு பெரிய வெள்ள தணிப்பு பகுதிக்கு மாற்றியமைக்க முடியும் என்று டத்தோ ஸ்ரீ ஃபடில்லா மேலும் விவரித்தார்.

இதனிடையே, கூடுதல் ஒதுக்கீட்டிற்காக பொருளாதார அமைச்சிடம் சமர்பிக்கப்பட்டு 13-ஆவது மலேசிய திட்டத்தில் தீர்மானிக்கப்படும் ஒதுக்கீட்டிற்காக தமது தரப்பு காத்திருந்தாலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)