கோலாலம்பூர், 04 அக்டோபர் (பெர்னாமா) -- கடந்த வியாழக்கிழமை முதல் இஸ்ரேலியப் படையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள GLOBAL SUMUD FLOTILLA, ஜி.எஸ்.எஃப் மனிதாபிமானப் பணியில் பங்கேற்ற 23 மலேசியர்கள், இன்று இஸ்ரேலில் இருந்து துருக்கி, இஸ்தான்புலுக்கு ஒரு சிறப்பு விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
அவர்கள் தெற்கு இஸ்ரேலில் உள்ள Ramon விமான நிலையத்திற்குப் பயணித்தில் இருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
“இப்போதுதான் துருக்கி அதிபரி எர்டோகனின் பாதுகாப்பு தலைமை இயக்குநர் டாக்டர் இப்ராஹிம் காலின் மூலம் ஒப்புதல் பெற்றேன். அவர் தற்போது துருக்கி அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்புடன் இந்த விஷயத்தை நிர்வகித்து வருகிறார். அன்காராவில் உள்ள மலேசிய தூதர் மற்றும் தூதரகத்துடன் ஒருங்கிணைப்பதற்காக தற்போது அன்காராவில் உள்ள மலேசிய புலனாய்வுத் தலைவருடன் நான் கலந்தாலோசித்த நிலையில், இஸ்ரேலின் கடுமையான மற்றும் கொடூரமான நடவடிக்கைகளால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் அழுத்தம் காரணமாக, அவர்கள் இஸ்தான்புல்லில் சுமார் ஒன்றரை நாட்கள் சுகாதார பரிசோதனைக்காக தங்குவது நல்லது. நான் ஒப்புக்கொள்கிறேன், அவர்கள் நாளை இரவு அல்லது அதற்கு மறுநாள் வீட்டிற்கு (மலேசியாவிற்கு) புறப்படுவார்கள், அதைத்தான் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.,'' என்றார் அவர்.
இன்று மாலை முகநூலின் வழி நேரலையாக அவர் இத்தகவல்களைக் கூறினார்.
23 மலேசியர்களை விடுவித்து நாட்டிற்கு அழைத்து வருவது நீண்ட அரச தந்திர பேச்சுவார்த்தைகளின் கிடைத்த வெற்றியாகும் என்று சுமார் நுசாந்தாராவின் புரவலருமான அன்வார், வலியுறுத்தினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மக்ரோ ருபியோவுடனும் ஜோர்டன் அரசாங்கத்துடனும் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் நடத்திய கலந்துரையாடல் மற்றும் மத்திய கிழக்கிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்தீவ் விட்கோபுடன் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் நடத்திய பேச்சு வார்த்தை உட்பட அனைத்துலக அளவில் நெருக்கமான ஒருங்கிணைப்பு, இந்த விடுதலை செயல்முறையில் உள்ளடக்கியிருப்பதாக அவர் கூறினார்.
அதோடு, கட்டார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, பிரதமர் ஷேக் முஹமட் பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் துருக்கியின் தேசிய பாதுகாப்புத் தலைவர் டாக்டர் இப்ராஹிம் கலின் ஆகியோருடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பலனாகவும் இந்த வெற்றி கிடைத்ததாக பிரதமர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)