ஜெனீவா, 07 ஜூலை (பெர்னாமா) -- மலேசியாவுக்கான வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில், அரசியல் நிலைத்தன்மையால் ஆதரிக்கப்படும் கொள்கைத் தெளிவும் நிலைத்தன்மையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மடானி பொருளாதார திட்டம், 2030-ஆம் ஆண்டு புதிய தொழில்துறை பிரதானத் திட்டம், N-I-M-P- தேசிய எரிசக்தி மாற்ற திட்டம் NETR ஆகியவை தெளிவான மற்றும் தொடர்ச்சியான கொள்கைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி பட்சில் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்து, ஜெனீவாவில் நடைபெற்ற புலம்பெயர்ந்த மலேசியர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போது டத்தோ ஃபஹ்மி பட்சில் அவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஐக்கிய நாடுகள் சபைக்கான மலேசியாவின் நிரந்தர பிரதிநிதி Datuk Nadzirah Osman கலந்து கொண்டார்.
மேலும், சுவிட்சர்லாந்தில் பணிப்புரியும் மலேசியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 50 பேர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் தொடர்புத் துறையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தையும் ஃபஹ்மி பகிர்ந்துக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)