கோலாலம்பூர், 07 செப்டம்பர் (பெர்னாமா) - அடுத்த ஆண்டுக்கான தேசிய சேவை பயிற்சி திட்டம் PLKN 3.0-இல் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளையோரை பங்கேற்க வைக்கும் இலக்கை தேசிய சேவை பயிற்சித் துறை JLKN கொண்டுள்ளது
இந்த எண்ணிக்கை, நெகிரி செம்பிலான் கெமாஸ், சரவாக் கூச்சிங்கில் உள்ள செமந்தான் மற்றும் சபா, தவாவின் குகுசான் ஆகிய புதிய முகாம்களின் பங்கேற்பையும் உள்ளடக்கி இருப்பதாக JLKN தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் டத்தோ யாகோப் சமிரான் தெரிவித்தார்.
"பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் மற்றும் ஆசிரியர் கல்விக் கழகங்கள் இதில் உட்படுத்தப்படவில்லை. அதாவது முகாமில் மட்டும் 8,000 முதல் 9,000 பேரை இலக்காகக் கொண்டுள்ளோம். அந்த எண்ணிக்கை முழுமையாகவில்லை. ஆனால் நாம் 25,000 பேரை பங்கேற்க செய்ய முடியும்," என்றார் அவர்.
கோலாலம்பூரில், இன்று நடைபெற்ற, 2025-ஆம் ஆண்டின் PLKN 3.0 தொடருக்கான இளையோர் பதிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவர் அதனைக் கூறினார்.
பிற்பகல் 12 மணி நிலவரப்படி இந்த ஆண்டுக்கான மூன்றாம் தொடருக்கான பதிவில் மொத்தம் 529 இளையோர் தங்களைப் பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)