சிரம்பான், 05 ஜூலை (பெர்னாமா) -- நெகிரி செம்பிலான், நீலாயில் உள்ள ஜாலான் அராப் மலேசியன் சாலையில் நேற்றிரவு விரைவுப் பேருந்து ஒன்று உயரத் தடுப்பு சுவரில் மோதியதில் ஓட்டுநர் உட்பட எழுவர் சொற்ப காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து இரவு மணி 10.30 அளவில் தமது தரப்பிற்கு அவசர அழைப்பு கிடைத்ததாக நீலாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த மூத்த தீயணைப்பு அதிகாரி கமான்டர் அஸ்மி ஹமிட் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அப்பேருந்தில் 30 முதல் 50 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட 19 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சிலாங்கூர், காஜாங்கிலிருந்து மலாக்காவுக்குச் செல்லும் வழியில் இவ்விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
இச்சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் சிகிச்சைகாக செர்டாங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)