பாங்கி , 03 ஜூலை (பெர்னாமா) -- நாடு முழுவதும் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனைக்கு, கல்வி சேவை ஆணையத்துடன் இணைந்து பல்வேறு விரிவான சீர்திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்தியதன் மூலம், கல்வி அமைச்சு தீர்வுக் கண்டுள்ளது.
இதன்வழி, ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனை மட்டும் தீர்க்கப்படவில்லை.
மாறாக, ஆசிரியர் பணியிட அமர்வு உயர் தரமானதாகவும், மாணவர்களின் தேவைகள் உட்பட தற்போதைய கல்விச் சூழலுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக நீடித்து வந்த இப்பிரச்சனைக்கு தீர்வுக் காணும் பொருட்டு, கல்வி அமைச்சிற்கும் SPP-க்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வியூக வழிமுறைகளின் மூலம் இவ்வெற்றி அடையப்பட்டதாக ஃபட்லினா சிடேக் விவரித்தார்.
ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இணைந்து பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருவதாகக் கூறிய ஃபட்லினா, கல்வியாளர்களாக உருவெடுப்பதற்கான ஆர்வம் இளைய தலைமுறையினரிடையே அதிகம் இருப்பதை இது பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார்.
இன்று, சிலாங்கூர், பாங்கியில் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர் அதனைக் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)