Ad Banner
Ad Banner
 விளையாட்டு

கிளப் உலகக் கிண்ண; ஐரோப்பிய ஜாம்பவான்கள் வெளியேற்றம்

01/07/2025 08:05 PM

வாஷிங்டன், 01 ஜூலை (பெர்னாமா) -- கிளப் உலகக் கிண்ண காற்பந்து போட்டியில், ஐரோப்பிய ஜாம்பவான்களான ஈன் மற்றும் மென்செஸ்டர் ஆகிய கிளப்கள்  தோல்வி கண்டன. 

இன்று அதிகாலை நடந்த ஆட்டங்களில் அவ்விரு கிளப்களும் தங்கள் எதிராளிகளிடம் தோல்வி கண்டு போட்டியில் இருந்து வெளியேறின. 

சிறந்த 16 அணிகள் சந்திக்கும் சுற்றில், Inter Milan 0-2 என்று பிரேசில் கிளப்பிடம் வீழ்ந்தது. 

ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலும்,  93-வது நிமிடத்திலும் தனது இரு கோல்களைப் போட்டு, அது அடுத்த சுற்றில் கால் வைத்துள்ளது. 

அதில் அது,  அல் ஹிலாலில் கிளப்பிடம் மோதவுள்ளது. 

முன்னதாக, மென்செஸ்டர் சிட்டி 3-4 என்று சவூதி அரேபிய அணியான அல் ஹிலாலிடம் தோல்வியடைந்தது.

கிளப் உலகக் கிண்ண போட்டியில், இதுவரை நடந்த ஆட்டங்களிலேயே இது மிகவும் பரபரப்பான ஆட்டமாக அமைந்தது.

3-3 என்று சமநிலை வரை வந்த ஆட்டம், 112-வது நிமிடத்தில் மார்கோஸ் லியோனார்டோ அடித்த கோல், அல் ஹிலாலுக்கு வெற்றியைத் தேடித் தந்து காலிறுதிக்கு முன்னேற வைத்துள்ளது. 

-- பெர்னாமா 


பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)