BREAKING NEWS | Malaysia hopes ASEAN-Canada Free Trade Agreement negotiations can be concluded soonest possible for mutual benefit - PM Anwar | |
உக்ரேன், 30 ஜூன் (பெர்னாமா) - வடக்கு இடாஹோவில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பதிலளிக்கும் போது இரண்டு தீயணைப்பு வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் போலீஸ் பாதுகாப்பு பலமாக்கப்பட்டதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை சட்ட அமலாக்க அதிகாரிகள் இன்னும் தேடி வருவதாக, அவர்கள் கூறினர்.
வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள Seattle மாகாணத்தின் கிழக்கே சுமார் 420 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள 57,000 மக்கள் வசிக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு ஒரு தனிநபரால் நடத்தப்பட்டதா அல்லது குழுவாக நடத்தப்பட்டதா என்ற தகவல் இன்னும் தெரியவில்லை.
எனினும், Coeur d'Alene உள்ள ஒரு இயற்கை பகுதியில் நடந்த சம்பவத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு அருகே செல்வதைத் தவிர்க்கும்படி போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)