இஸ்லாமாபாத், 30 ஜூன் (பெர்னாமா) -- பாகிஸ்தான் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையினால் இதுவரை 45 பேர் உயிரிழந்திருப்பதாகப் பேரிடர் நிர்வகிப்பு அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தானின் பல பகுதிகளில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள கைபர் பக்துன்க்வா மாவட்டத்தில் மட்டும் 10 குழந்தைகள் உட்பட 21 பேர் பலியாகினர்.
இதனிடையே, இந்திய எல்லையுடன் உள்ள பஞ்சாபில், புதன்கிழமை தொடங்கி 13 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், வெள்ளத்தினால் சிலரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானில் கனமழை பெய்யும் என்றும் அதனால் வெள்ளம் ஏற்படும் என்றும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் முன்னதாக எச்சரித்திருந்தது.
பருவநிலை மாற்றத்தினால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் 24 கோடி மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தான் ஒன்றாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)