எண்டியொகுய்யா, 26 ஜூன் (பெர்னாமா) -- கொலம்பியா, எண்டியொகுய்யா, பெலோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடி மீட்கும் பணியில், அதன் மீட்புப் பணியாளர்களும் குடிமக்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
திடீரென பனிப்பாறைகள் இடிந்து விழுந்ததில் அங்கிருந்த வீடுகள் புதையுண்டதாகவும், கண் முன்னே நிகழ்ந்த இழப்பை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் குடியிருப்பாளர்களில் சிலர் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்திருப்பதாக கொலம்பிய ஊடகங்கள் கூறின.
ஆபத்து நிறைந்த பகுதிகளில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)