Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

போதைப்பொருள் விநியோகித்த குற்றச்சாட்டிலிருந்து மூவர் விடுவித்து விடுதலை 

25/06/2025 05:34 PM

ஈப்போ, 25 ஜூன் (பெர்னாமா) - கடந்த ஆறாண்டுகளுக்கு முன்பு 1,145.5 கிராம் எடையிலான போதைப் பொருளை விநியோகித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து நண்பர்கள் மூவரை ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று விடுவித்து விடுதலை செய்தது. 

அம்மூவருக்கு எதிரான போதிய முகாந்திரங்களைச் சமர்ப்பிக்க அரசு தரப்பு தவறியிருப்பதால் நீதிபதி டத்தோ ஹுப்பின்டர் சிங் குர்சரன் சிங் பிரிட் இத்தீர்ப்பை வழங்கினார்.

அந்தப் போதைப் பொருளின் உண்மை அடையாளம் நிரூபிக்கப்படாததோடு அதன் எடையிலும் ஏறத்தாழ 90 கிராம் வேறுபாடு இருந்தது கண்டறியப்பட்டதாக சிங் தெரிவித்தார். 

2019-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி தாமான் பிஞ்சி செனியில் உள்ள வீடொன்றில் 1,145.5 கிராம் கினாபிஸ் வகை போதைப்பொருளை விநியோகித்ததாக முஹமட் நஸ்ரின் ஹஸிம் அப்துல்லா சத்தார்,முஹமட் சுஹாய்மி அஹ்மட் மற்றும் முஹமட் ஷாஃபிக் ஷம்சுடின் ஆகிய அம்மூவரின் மீதும் குற்றம் பதிவாகியிருந்தது. 

மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டணை மற்றும் மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு குறைந்தது 12 பிறம்படி விதிக்க வகை செய்யும்,1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப்பொருள் சட்டம் செக்‌ஷன் 39B (1) (a), அதே சட்டம் செக்‌ஷன் 39B (2) மற்றும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 34-இன் கீழ் இவ்வழக்கு விசாரிகப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)