Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

தொழில்முறை பூப்பந்து விளையாட்டாளர்களுக்கு பயிற்சி இடங்கள் ஏற்பாடு

21/06/2025 05:38 PM

புத்ராஜெயா, 21 ஜூன் (பெர்னாமா) -- ரோட் டு கோல்ட் (Road to Gold), ஆர்.டி.ஜி திட்டத்தில் இடம்பெற்றுள்ள நாட்டின் தொழில்முறை பூப்பந்து விளையாட்டாளர்களுக்கு மிகவும் உகந்த பயிற்சி இடங்கள் ஏற்பாடு செய்து தரப்படும்.

தங்கள் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் முயற்சியாக தொழில்முறை விளையாட்டாளர்கள் தரமான பயிற்சியாளர்களை கொண்டிருப்பதையும் ஆர்.டி.ஜி செயற்குழு உறுதி செய்யும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.

''தொழில்முறை விளையாட்டாளர்களுக்கு மிகவும் பொருத்தமான பயிற்சி இடங்களைக் கண்டறிய  நாங்கள் உதவ முடியும் என்று நம்புகிறேன். மிகவும் தனிப்பட்ட முறையில். பயிற்சி பெறுவதற்கு விளையாட்டாளர்கள் பேரங்காடி செல்ல வேண்டியதில்லை. எனவே டத்தோ ஸ்டூவர்ட் அவர்களுக்கு உதவ உதவியை ஒருங்கிணைப்பார் என்று நான் நம்புகிறேன்,'' என்றார் அவர். 

சனிக்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

உலகின் முதல் நிலை ஆடவர் இரட்டையர் ஜோடி கோ சீ ஃபெய் - நூர் இசுடின் ரும்சானி மற்றும் கலப்பு இரட்டையர் கோ சூன் ஹுவாட் - ஷெவொன் லாய் ஜெம்மி ஆகிய நான்கு தொழில்முறை விளையாட்டாளர்கள் ஆர்.டி.ஜி  திட்டத்தில் இணைந்துள்ளதாக ஹன்னா அண்மையில் அறிவித்திருந்தார்.

இதனிடையே பெர்லி தான் - எம். தீனா ஒப்பந்தம் குறித்து கருத்துரைத்த ஹன்னா, மலேசிய பூப்பந்து சங்கம் அவ்விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உலகின் மூன்றாம் நிலை விளையாட்டாளர்களான அவர்களின் ஒப்பந்தம் கடந்த டிசம்பரில் நிறைவந்த நிலையில் இன்னும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று கூறப்படுகிறது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]