மயாமி, 02 ஜூலை (பெர்னாமா) -- கிளப் உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் சிறந்த 16 கிளப்கள் சந்திக்கும் சுற்றில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் 1-0 என்ற நிலையில் இத்தாலியின் யுவெந்தஸ் கிளப்பை தோற்கடித்தது.
ஃபுளோரிடாவின் ஹார்ட் ராக் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின்போது, வெப்பநிலை 30 பாகை செல்சியஸை எட்டியது ஆட்டத்தில் களமிறங்கிய விளையாட்டாளர்களுக்கு கடுமையான சவாலாக இருந்தது.
இதனால், யுவெந்தஸ் கிளப்பை சேர்ந்த 10 ஆட்டக்காரர்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதி கேட்டுக்கொண்டதாக அதன் நிர்வாகி இகோர் தியுடொர் தெரிவித்தார்.
மோசமான வானிலை காரணமாக யுவெந்தஸ் முதல் நிலை ஆட்டக்கார்கள் சோர்வடைந்து மாற்று ஆட்டக்காரர்கள் களமிறக்கப்பட்டார்கள்.
ஆயினும், 1-0 என்று நிலையில் யுவெந்தஸ் தோல்வி கண்ட வேளையில் ரியல் மாட்ரிட் வெற்றிகரமாக காலிறுதிக்கு முன்னேறியது.
அதன் ஒரே கோலை கொன்சாலோ கார்சியா போட்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]