புதுடெல்லி, 02 ஜூலை (பெர்னாமா) -- ஆபத்தான அளவை எட்டியுள்ள காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, பழைய வாகனங்களுக்கான எரிபொருள் விற்பனையை இந்தியத் தலைநகர் புதுடெல்லி தடை செய்துள்ளது.
உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்படும் புது டெல்லி, ஒவ்வொரு குளிர்காலத்திலும் அதன் வான்வெளி நச்சுப் புகையினால் சூழ்ந்து கொள்கிறது.
15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களையும், 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களையும் புதுடெல்லி சாலைகளில் இயக்க, 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் அத்தடை இன்னும் மீறப்படுகின்றன.
இதுபோன்று புதுடெல்லியில் 60 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன.
நேற்று முதல் அமலுக்கு வந்த இந்தத் தடை, பழைய வாகனங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதையும், அவற்றில் எரிபொருள் நிரப்புவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)