நியூ யார்க், 18 மே (பெர்னாமா) -- உக்ரேனில் போரை நிறுத்துவது குறித்து விவாதிக்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் கலந்துரையாடப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் நாளை நடைபெறும் என்று நம்பப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான முதல் நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெற்ற சில நாள்களுக்குப் பிறகு, டோனல்ட் டிரம்ப் புதினுடன் பேசவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான அச்சந்திப்பில், முக்கிய முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
இருதரப்பிலும் 1000 போர் கைதிகளை பரிமாற்றம் செய்ய ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், உக்ரேனின் 30 நாள்கள் உடனடி போர் நிறுத்தக் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்தது.
புதினுடனான கலந்துரையாடலை துருக்கியில் மேற்கொள்ள டிரம்ப் திட்டமிட்டிருந்த நிலையில், புதின் அதனை நிராகரித்தார்.
ஆகவே, புதினுடனான தொலைப்பேசி அழைப்பு திங்கட்கிழமை மேற்கொள்ளப்படும் என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)