Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்; அரையிறுதியில் அல்கராஸ் & சபலென்கா

09/07/2025 08:04 PM

லண்டன், 09 ஜூலை (பெர்னாமா) -- 2025 விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், காலிறுதிப் போட்டிகள் பரபரப்புடன் நடைபெற்று வருகின்றன.

அதில், உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான ஸ்பெயின் கார்லோஸ் அல்கராஸ், வெற்றிகரமாக அரையிறுதிக்கு முன்னேறினார்.

சில போட்டிகள் எதிர்பார்த்தபடியே முடிந்தாலும், சில முன்னணி வீரர்கள் கடுமையாகப் போராடி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

நடப்பு வெற்றியாளரான கார்லோஸ் அல்கராஸ் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டி, அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

1 மணி நேரம் 39 நிமிடங்களில் அவர் பிரிட்டனின் கேமரூன் நோரியை 6-2, 6-3, 6-3 என்ற நிலையில் தோற்கடித்து அரையிறுதியில் கால் வைத்துள்ளர்.

ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளரான அல்கராஸ், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்காக அரையிறுதியில் டெய்லர் ஃபிரிட்ஸை எதிர்கொள்வார்.

அல்கராஸ் தற்போது 23 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார்.

இது அவரது எட்டாவது கிராண்ட்ஸ்லாம் அரையிறுதி போட்டியாகும்.

இதனிடையே, மகளிர் காலிறுதி ஆட்டத்தில் உலகின் முதன்நிலை வீராங்கனையான பெலாருசின் அரியனா சபலென்கா வெற்றிப் பெற்றார்.

அவர் ஜெர்மனியின் லாராவுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி 4-6, 6-2, 6-4 என்ற நிலையில் வெற்றி பெற்று தனது மூன்றாவது விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறினார்.

மூன்று மணி நேரம் நீடித்த இந்தப் போட்டியில், சபலென்காவின் உணர்வுபூர்வமான இந்த வெற்றி, அவரது மன உறுதியை வெளிப்படுத்தியது.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)