உக்ரேன், 30 ஜூன் (பெர்னாமா) - உக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் நேற்றிரவு நூற்றுக்கணக்கான குண்டுகளை வீசி தாக்குதல்களைத் தொடர்ந்திருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப் பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும் என்று Kyiv கூறியுள்ளது.
இதில் 400-க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகினர்.
அந்நாட்டின் 477 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள வேளையில்,
60 ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டதாக உக்ரேனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
மேற்கு உக்ரேன் உட்பட போர் முனைகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள பல பகுதிகளை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரேனிய விமானப்படையின் தகவல் தொடர்புத் தலைவர் Yuriy Ihnat தெரிவித்தார்.
உக்ரேனின் இராணுவ தொழில்துறை வளாகம், ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அதன் தளங்கள் போன்றவற்றை தாங்கள் அழித்ததாக ரஷ்ய இராணுவம் குறிப்பிட்டிருந்தது.
இதஸ்தான்புலில் நடைபெறும் புதிய போர் அமைதி பேச்சுவார்த்தைக்கு மாஸ்கோ தயாராக இருப்பதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த தாக்குதல்கள் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதனிடையே, போரைத் தொடர்வதற்கான புடினின் முடிவை, இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் காட்டுவதாக, உக்ரேனிய அதிபர் Volodymyr Zelensky கூறியுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)