Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட விவகாரம்; ஐ.நா. கடும் கண்டனம்

01/05/2025 06:17 PM


நியூயார்க், 1 மே (பெர்னாமா) -- இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி 26 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

துயரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த மோதலைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியதாக ஐ.நா. பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறினார்.

''இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து பொதுச்செயலாளர் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். மேலும் துயரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மோதலைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் கோடி காட்டினார். பதற்றத்தைக் குறைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் பொதுச் செயலாளர் தமது ஆதரவைத் தெரிவித்தார், '' என்று டுஜாரிக் குறிப்பிட்டார்.

இத்தாக்குதல் குறித்து பாகிஸ்தான் மற்றும் இந்தியத் தலைவர்களுடன் தொலைபேசி அழைப்பில் பேசியபோது அந்தோனியோ குட்டெரெஸ் அத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)