Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

போப் பிரான்சிஸ் பக்கவாதத்தால் உயிரிழந்தார் - வத்திகன் அறிவிப்பு

22/04/2025 05:52 PM

ரோம், 22 ஏப்ரல் (பெர்னாமா) -- கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் பக்கவாதத்தால் உயிரிழந்ததாக வத்திகன் தெரிவித்திருக்கிறது.

88 வயதான போப் பிரான்சிஸ் நேற்று காலை காலமானார்.

நேற்று அதிகாலை அவர் திடீர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாக வத்திகனைச் சேர்ந்த மருத்துவர் ஏண்ட்ரியா எர்சங்கெலி கூறியிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து இருதயம் செயலிழந்து, அவர் நினைவற்ற நிலைக்குச் சென்றதாகவும் அந்த மருத்துவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் கடுமையான நிமோனியா நோய்த்தொற்று காரணமாகப் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, மருத்துவமனையிலிருந்து வீடுத் திரும்பிய அவர் நேற்று இயற்கையை எய்தினார்.

போப் பிரான்சிஸ்சின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உலகம் முழுக்க பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

இறுதிச் சடங்கிற்கான தேதி எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]