கே.எல்.சி.சி, 09 ஜூலை (பெர்னாமா) -- எதிர்காலத்திற்கு ஏற்ற தென்கிழக்கு ஆசியாவை நோக்கிய முயற்சிகளில் ஆசியான் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், வியூக சுய ஆட்சி முறை மற்றும் கூட்டு நடவடிக்கை உணர்வை, ஆசியான் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.
"இந்த இலக்கை அடைவதில், மலேசியாவின் தலைமைத்துவம் உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மையினால் வழிநடத்தப்படுகிறது. இந்த மதிப்புகளில் எதிர்கால நோக்கமுடைய கட்டமைப்பிற்குள் வட்டார அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை வலுப்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்", என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற 58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், AMM-இன் தொடக்க விழாவில் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் அவ்வாறு உரையாற்றினார்.
20 ஆண்டுகால தொலைநோக்குப் பார்வை, மீள்தன்மை, புத்தாக்கம் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பயணத்தை நோக்கமாகக் கொண்டுள்ள ஆசியான் 2045 பற்றியும் குறிப்பிட்ட அவர், இது இப்போது தொடங்கி ஆசியானால் வழிநடத்தப்படும் என்று கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)