கே.எல்.சி.சி, 09 ஜூலை (பெர்னாமா) -- நாளை கோலாம்பூரில், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ உடனான சந்திப்பில் வரி அமலாக்கம் தொடர்பான விவகாரங்களை தாம் பேசவிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அதிபர் டோனல்ட் டிரம்பின் அண்மைய வரி அறிவிப்பிற்குப் பிறகும், மலேசியா இன்னும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
''எந்தவொரு ஒருதலைப்பட்ச வரியும் இந்நாட்டின் மற்றும் இவ்வட்டாரத்தின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் நாங்கள் இன்னும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இருக்கிறோம், நாளை நான் செயலாளர் ரூபியோவை சந்திக்கும் போது, அதிபர் டிரம்பின் இறுதி முடிவுக்கு முன்னர் அவரும் அதைப் பற்றி விவாதிக்கும் வகையில், இந்த பிரச்சனையில் சிலவற்றை அவரது பரிசீலனைகளும் இருக்கும்'', என்றார் அவர்.
அமெரிக்காவுடன் வலுவான உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை அன்வார் வலியுறுத்துவதோடு, ஒரு வர்த்தக நாடாக மலேசியாவின் நிலைப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
கோலாலம்பூரில், இன்று நடைபெற்ற 58-வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் அதனை தெரிவித்தார்.
வரும் ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா 25 விழுக்காடு வரியை விதித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)