Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

டெக்சஸ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் அனுப்பப்படுகின்றன 

08/07/2025 07:54 PM

டெக்சஸ், 08 ஜூலை (பெர்னாமா) -- அமெரிக்கா, டெக்சசில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதன் மத்திய பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நன்கொடை மையத்தின் வழியாக உதவிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. 

அடிப்படைத் தேவையான உணவுகள், நீர் போன்றவற்றை தன்னார்வலர்கள் லாரிகளில் ஏற்றிச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகின்றனர். 

டெக்சஸ்சின் மத்திய பகுதி வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதோடு,  தீயணைப்பு நிலையம் முற்றிலும் சேதமடைந்திருப்பதால் குவாடாலுப்பே ஆற்றின் பாலம் தற்போது மூடப்பட்டுள்ளது. 

அங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100-ரைக் கடந்துள் வேளையில் அதில் 41 பேரை காணவில்லை என்பது  உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நான்காவது நாளாக முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

வெள்ள நிலைமை இன்னும் மோசமடையும் என்று அஞ்சப்படுவதால் மக்கள் பாதுக்காப்பாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]