பொது

காலுறை விவகாரம்; 25 புகார்களைப் பெற்றுள்ளது ஜோகூர் போலீஸ்

25/03/2024 07:05 PM

ஜோகூர் பாரு, 25 மார்ச் (பெர்னாமா) -- காலுறையில் 'அல்லாஹ்'  என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், பல்வேறு தரப்பிடமிருந்து இதுவரையில் 25 புகார்களை ஜோகூர் போலீஸ் பெற்றுள்ளது.

மேலும், இவ்விவகாரம் குறித்து அச்சுறுத்தப்பட்டதாக, தொழிற்சாலையின் பிரதிநிதி இடமிருந்து தமது தரப்பிற்கு புகார் கிடைத்துள்ளதாகவும் ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் சிபி எம்.குமார் தெரிவித்தார். 

"குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 506 மற்றும் 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்‌ஷன் 233-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது. கடந்த 23ஆம் தேதி தொழிற்சாலை பிரதிநிதி போலீஸ் புகார் செய்ததால் அன்றுதான் விசாரணை அறிக்கையும்  திறக்கப்பட்டன," என்றார் அவர்.

இதனிடையே, சம்பவம் பரவலாக பேசப்பட்ட பிறகும் தொழிற்சாலை வளாகத்தை சோதனை செய்வதில் ஜோகூர் போலீஸ் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக சில தரப்பினர் கூறி வருவதையும் குமார் மறுத்திருக்கிறார்.

217ஆம் ஆண்டு போலீஸ் தினத்தை முன்னிட்டு, ஜோகூர் மாநில போலீஸ் தலைமையத்தில் நடைபெற்ற மாநில அளவிலான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)