Thursday, 21 Jan 2021
விளையாட்டு
11/01/2021 06:09 PM

புக்கிட் ஜாலில், 11 ஜனவரி (பெர்னாமா) -- இப்பருவத்தில் மலேசிய ஹாக்கி லீக் (LHM) ஏற்பாடு குறித்து எடுக்கப்படும் எந்தவொரு முடிவையும் ஏற்க யங் டைக்ரஸ் ஹாக்கி அணி தயாராக உள்ளது.

மலேசிய ஹாக்கி லீக் ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல் அறிவிக்கப்பட்டால் அதன் நிலை குறித்துக் கூடிய விரைவில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை மலேசிய ஹாக்கி சம்மேளனம் நடத்தும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மலேசிய ஹாக்கி லீக் ஒத்திவைக்கப்பட்டால் விளையாட்டாளர்கள் தங்களின் உற்சாகத்தை இழக்க மாட்டார்கள் என்று தான் நம்புவதாக யங் டைக்ரஸ் ஹாக்கி அணியின் தலைமை பயிற்றுநர், எ.கண்ணகி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, மலேசிய ஹாக்கி சம்மேளனத்தின் ஒவ்வொரு முடிவும் அனைத்துத் தரப்பினர் குறிப்பாகப் போட்டியிடும் அணியின் நன்மைக்காகவே என்றும் அவர் கூறினார்.

''நிலைமை எவ்வாறு இருப்பினும், நாங்கள் தயாராகிவிட்டோம். நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்பட்டால் மலேசிய ஹாக்கி லீக்-உம் ஒத்திவைக்கப்பட நேரிடும். அரசாங்கத்தின் கட்டளையைப் பின்பற்றி ஆக வேண்டும். இது ஒரு நல்ல வழியென்று நான் நினைக்கின்றேன்.'' என்று எ.கண்ணகி தெரிவித்தார்.

இம்முடிவினால் அனைத்து அணியினரும் குறிப்பாகக் காயம் அடைந்திருக்கும் விளையாட்டாளர்கள் முழுமையாகத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள அதிக நேரம் கிடைத்திருப்பதாகவும் கண்ணகி சுட்டிக் காட்டினார்.

ஆண்கள் பிரிவிற்கான போட்டி ஜனவரி 14 முதல் 20 வரையிலும் பெண்கள் பிரிவிற்கான போட்டி ஜனவரி 20 முதல் பிப்ரவரி 20 வரையிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆயினும், அண்மையில் நாட்டில் மூவாயிரத்துக்கும் மேலான கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி வருகின்ற நிலையில் திட்டமிட்டப்படி ஹாக்கி லீக் போட்டி நடைபெறாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கண்ணகி கூறினார்.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க