BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
பொது

இன்று 1,096 புதிய சம்பவங்கள்; மூன்று மரணப் பதிவு

22/11/2020 07:45 PM

புத்ராஜெயா, 22 நவம்பர் (பெர்னாமா) -- நாட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் கொவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைவிட, அந்நோயில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி இருக்கிறது.

நாட்டில் இன்று நண்பகல் 12 மணி வரையில் 1,096 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருக்கும் வேளையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,104-ஆக பதிவாகி இருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

இன்று பதிவாகிய புதிய சம்பவங்களில் 1,090 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியது என்றும் எஞ்சிய 6 சம்பவங்கள் வெளிநாட்டில் பரவியது என்றும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா குறிப்பிட்டார்.

இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12,843-ஆக பதிவாகி இருப்பதாக அவர் கூறினார்.

இந்நிலையில், இன்று ஒரு அந்நிய நாட்டினர் உட்பட மூவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்திருக்கின்றனர்.

அதோடு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் 106 பேரில் 46 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.

-- பெர்னாமா