அரசியல்

வெள்ளப் பேரிடரைக் கையாளும் தயார்நிலை குறித்து விளக்கமளிப்பு கூட்டம்

13/11/2020 04:50 PM

குவாந்தான், பகாங் 13 நவம்பர் (பெர்னாமா) -- 2020/2021-ஆம் ஆண்டுகளில் ஏற்படக்கூடிய வெள்ளப் பேரிடரைக் கையாளும் தயார்நிலை குறித்து, இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விளக்கமளிப்பை, மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா செவிமடுத்தார்.

பகாங், குவாந்தன் அரண்மனையில், காலை 10.30 மணிக்குத் தொடங்கிச் சுமார் 1 மணி நேரத்திற்கு நடைப்பெற்ற இவ்விளக்கமளிப்பு கூட்டத்தைப் பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஜாலில் ஹஸான் வழிநடத்தினார்.

தற்காலிக வெள்ள நிவாரன மையங்களில் கொவிட்-19 பெருந்தொற்று பரவாமல் தடுக்க, புதிய இயல்பு முறைகளுக்கும், செயல்பாட்டுத் தர விதிமுறைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று மாமன்னர் இந்த விளக்கமளிப்பு கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

-- பெர்னாமா