பொது

முதன்மை இலக்கவியல் தளம் உருவாக்கப்படவிருக்கிறது

13/07/2020 06:27 PM

கோலாலம்பூர், 13 ஜூலை (பெர்னாமா) -- நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவான பிகேபி காலகட்டத்தில், இணைய ஊடுறுவல் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, இணைய பாதுகாப்பை உறுதிசெய்ய அரசாங்கம் முதன்மை இலக்கவியல் தளத்தை உருவாக்கவிருக்கிறது. 

இந்நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த தளங்கள் தொடங்கப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ரிட்சுவான் முஹமட் யூசோப் தெரிவித்திருக்கிறார். 

பிகேபி-யின் போது, இணைய ஊடுறுவல் சம்பவங்கள் 80 விழுக்காடு அதிகரித்து இருப்பதாக, CYBERSECURITY MALAYSIA அண்மையில் தகவல் வெளியிட்டுள்ளது. 

எனவே, இதர பாதுகாப்பு நிறுவனங்கள் மூலம் இணைய அச்சுறுத்தல் சம்பவங்ளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்தும் வருவதாக அவர் தெரிவித்தார். 

தனிநபர் உட்பட நாட்டின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் எதிர்கொள்வதிலும் மேற்கொள்ளப்படும் தயார்நிலைப் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயிலின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

-- பெர்னாமா