Monday, 06 Jul 2020
பொது
30/06/2020 09:02 PM

புத்ராஜெயா, 30 ஜூன் (பெர்னாமா) -- அரசியல் கூட்டணி கட்சியான பெரிக்காதான் நேஷனல் மக்கள் நலனிலும் நாட்டின் மேம்பாட்டிலும் ஒத்துழைப்பை மேற்கொண்டு வெற்றிபெறும் ஆற்றலைக் கொண்டிருப்பதை, சினி சட்டமன்ற இடைத்தேர்தலில், பெரிக்காதான் நேஷனல் கட்சியைப் பிரதிநிதித்து போட்டியிடவிருக்கும் தேசிய முன்னணி வேட்பாளரின் வெற்றி எடுத்துக் காட்டவிருக்கிறது. 

சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரிக்காதான் நேஷனல் கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து, வெளிப்படையாக பிரச்சாரம் செய்வது, அக்கட்சி வலுவான மற்றும் நிலையான அரசியல் கூட்டணி கட்சியாக விளங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் தெரிவித்திருக்கிறார். 

சினி சட்டமன்ற இடைத்தேர்தலே, பெர்சத்து கட்சி பெரிக்காதான் நேஷனலில் இணைந்த பிறகு சந்திக்கும் முதல் தேர்தலாகும். 

இந்த தேர்தலில் தேசிய முன்னணி தேர்வு செய்த வேட்பாளரான முஹமட் ஷாரிம் முஹமட் சைன்-க்கு, பெர்சத்து கட்சி தலைவராகவும் பிரதமராகவும் தாம் முழு ஆதரவு வழங்குவதாக முகிடின் இன்று, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். 

பெரிக்காதான் நேஷனலின் முதல் வெற்றியை உறுதிசெய்ய, அக்கூட்டணி தேர்வு செய்த வேட்பாளருக்கு உதவும் வகையில், பெக்கான் தொகுதி பெர்சத்து கட்சி தேர்தல் கேந்திரங்கள் பணியாற்றி வருகின்றன. 

நாடு முழுவதிலும் உள்ள, பெர்சத்து மூத்த தலைவர்களின் வருகை, பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். 

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் சினி சட்டமன்ற இடைத்தேர்தலின் வாக்களிப்பின்போது, அத்தொகுதியில் இருக்கும் 20,990 பதிவுபெற்ற வாக்காளர்களும் தேசிய முன்னணி வேட்பாளருக்கு தங்களின் முழு ஆதரவை வழங்குமாறு முகிடின் கேட்டுக் கொண்டார். 

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க