Thursday, 02 Jul 2020
30/06/2020 04:33 PM

ஜெனிவா, 30 ஜூன் (பெர்னாமா) -- கொவிட்-19 நோய் அதிகரித்து வருவதால், தொடர்ந்து சில மாதங்களுக்கு இந்நோயுடன் புதிய இயல்பு முறையில் வாழ மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரைசஸ் தெரிவித்திருக்கிறார். 

உலகளவில் ஒரு கோடியே 21,401 பேருக்கு இந்நோய் கண்டிருப்பதாக, உலக சுகாதார நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

அதோடு, மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் நான்கு லட்சத்து 9,991ஆக அதிகரித்திருக்கிறது. 

இந்நோய் பரவத் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, முழு பங்களிப்பையும் வழங்க வேண்டும் என்று டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார். 

அதோடு, நீண்டகால போராட்டத்திற்கு தயாராகுமாறும் அவர் உலக நாடுகளுக்கு எச்சரித்திருக்கிறார். 

--பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க