கடந்த 24 மணி நேரத்தில், சீனாவில், 254 பேர் கொவிட்-19 நோயினால் பலியாகி இருக்கின்றனர்

 
 
 

ஹுபெய், 13 பிப்ரவரி [பெர்னாமா] -- கடந்த 24 மணி நேரத்தில், சீனாவில், 254 பேர் கொவிட்-19 நோயினால் பலியாகி இருக்கின்றனர். 

மேலும் புதிய 15,152 பேர் கொவிட்-19 நோயினால் பாதிக்கப் பட்டிருப்பதாக, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்திருக்கிறது. 

இதனை தொடர்ந்து, மத்திய ஹூபே மாகாணத்தில் உள்ள ஷிஹன் எனும் மாவட்டம் ஒன்றில், அடுத்த 14 நாட்களுக்கு போர்க்கால கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. 

அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கட்டிடங்கள் முழுமையாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொவிட்-19 நோயினால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் ஹூபே மாகாணத்தில் முதல் முறையாக போர்க்கால கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

அந்த மாவட்டத்தில் வசிக்கும் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். 

மேலும், ஹூபே மாகாணத் தலைவர் ஜியாங் ஷாலியாங் ஜியாங் சொளலியாங் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கொவிட்-19 நோயினால், உலகளவில் இதுவரை 1357 பேர் பலியாகியிருக்கின்றனர். 

உலகம் முழுவதும் சிங்கப்பூர், அமெரிக்கா உட்பட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்நோய் பரவியுள்ளது. 

-- பெர்னாமா 

 
 
 

       பொது

       அரசியல்

       சிறப்புச் செய்தி

       உலகம்