Ad Banner
Ad Banner
 உலகம்

காங்கோவில் 956-ஆக உயர்ந்த எபோலா

21/06/2026 07:44 PM

இதுரி, 21 ஜூன் (பெர்னாமா) -- காங்கோ ஜனநாயக குடியரசில் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா  நோய்த்தொற்று எண்ணிக்கை 956-ஆக உயர்ந்துள்ளது. 

இதில் 247 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை  வெளியிட்ட  அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

கடந்த வெள்ளிக்கிழமை இதுரி மற்றும் வட கீவு மாகாணங்களில் 23 புதிய உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் பதிவாகியுள்ள வேளையில், அவற்றில் இருவர்
உயிரிழந்துள்ளனர்.

இதுரி மாகாணம் இன்னும் இந்த நோய்ப்பரவலின் மையப்பகுதியாக இருப்பதால்  அதன் எண்ணிக்கை அங்கும் அதிகரித்து வரும் கட்டத்திலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

அங்கு மட்டும் 874 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளும் 201 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. 

இது நாட்டின் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளில் 91 விழுக்காடு அதிகமாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)