Ad Banner
Ad Banner
 பொது

மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டு நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டிருக்கும் ரோஹிங்கியா அகதிகள்

12/06/2026 04:41 PM

கோலாலம்பூர், 12 ஜூன் (பெர்னாமா) -- இந்நாட்டில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் உள்ளூர் சட்டங்களையும் விதிமுறைகளையும் எப்போதும் பின்பற்ற வேண்டும் என்றும், அவ்வாறு பின்பற்றாத நிலையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார். 

மனிதாபிமான அணுகுமுறையை மலேசியா கடைப்பிடித்தாலும், கட்டிட வளாகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் வணிகம் உள்ளிட்ட அம்சங்களில் இக்குழுவினர் நாட்டின் சட்ட அமைப்புக்கு உட்பட்டே உள்ளதாக பிரதமர் கூறினார். 

''மியன்மார் மக்களுக்கும், குறிப்பாக ரோஹிங்கியா சமூகத்தினருக்கு ஓர் அறிவுரை. அவர்களும் நம் நாட்டில் உள்ள விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். அவர்கள் இருக்கும் கட்டிடங்களிலும், மேற்கொள்ளும் வணிகங்களிலும் அந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் பின்பற்றாவிட்டால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்,'' என்றார் அவர். 

இன்று, கோலாலம்பூர், செந்தூலில் உள்ள அல்-ஹிடாயா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

சம்பந்தப்பட்ட பிரிவினர் எந்தவொரு முறைகேட்டையும் மேற்கொள்ளாமல் இருப்பதை கண்காணிப்பதில், நகராண்மை அதிகாரிகளும் மாநில அரசாங்கங்களும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அன்வார் நினைவூட்டினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]