Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

பாலியல் துன்புறுத்தல்; துணிந்தால் மாற்றம்

01/06/2026 08:16 PM

கோலாலம்பூர், ஜூன் 1 (பெர்னாமா) -- பாலியல் துன்புறுத்தல்....

இது தனிநபரை மட்டுமல்லாது, அவரைச் சார்ந்த குடும்பம் மற்றும் சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இத்தகைய குற்றங்களை அரசாங்கம் கடுமையாகக் கருதுவதால், சட்ட ரீதியாக பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளிக்க தயக்கம் காட்டாமல், தங்களுக்கு நேர்ந்த அநீதியை சட்டத்தின் பார்வைக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்று வழக்கறிஞர் கோகிலவாணி வடிவேலு ஆலோசனை வழங்கியுள்ளார்.

''பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்பு நடுவர் மன்றம் உள்ளது. அது ஒரு நீதிமன்றம் போன்றது, ஆனால் மன்றம். அங்கு நாம் புகார் அளிக்கலாம்,'' என்றார் அவர்.

பாலியல் துன்புறுத்தல் என்பது உடல் ரீதியான செயல்களுக்கு மட்டுமல்ல.

ஆபாசமான வார்த்தைகள், இரட்டை அர்த்தப் பேச்சுகள், தேவையற்ற சைகைகள், முகபாவனைகள், குறுஞ்செய்திகள், சமூக ஊடகங்கள் அல்லது இணையம் வழியாக அனுப்பப்படும் பாலியல் தன்மை கொண்ட தகவல்கள் உட்பட பல்வேறு வடிவங்களிலும் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.

தனிநபரின் மரியாதை, பாதுகாப்பு உணர்வு மற்றும் மனநலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்கள் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படுகின்றன.

பொது இடங்கள், பணியிடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட சட்டங்களின் கீழ் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோகிலவாணி கூறினார்.

இதனிடையே, கடந்த பல மாதங்கள் சிறார்கள் மீதான பாலியல் துன்புறத்தல்கள் சம்பவங்களும் அதிகரித்து வருவதால், அவர்களின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் அவர் விளக்கினார்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், குற்றம் புரிந்தவர் உயர் பதவியில் இருப்பவராக இருந்தாலும் தயங்கக் கூடாது.

தங்களுக்கான நீதி கிடைப்பதை உறுதி செய்ய, உரிய அதிகாரிகளிடம் புகார் அளித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று கோகிலவாணி அறிவுறுத்தினார்.

அண்மையில், பெர்னாமா செய்திகளின் பார்வை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோகிலவாணி, அத்தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

பெர்னாமா செய்திகள் தயாரிப்பிலான பார்வை கலைந்துரையாடல் நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 730-க்கு ஒளியேறும்.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)