வெனிசுவேலா, 30 ஜூன் (பெர்னாமா) -- லா குவைரா பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நிலநடுக்கம் நிகழ்ந்து ஆறு நாள்களுக்கு பிறகு, இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியிருந்த 12 வயது சிறுவனை அவசரக்கால மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
குயிட்டோ மாகாண தீயணைப்புத் துறையினரால் வெளியிடப்பட்டுள்ள காணொளியில், மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றி, அச்சிறுவனைப் பத்திரமாக மீட்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
ஐந்தாவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த நிலநடுக்கத்தால் இதுவரை சுமார் 200-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளன.
மேலும், பல நூறு கட்டிடங்கள் மிகக் கடுமையான சேதமடைந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிபாடுகளுக்கு இடையே மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால், மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரட்டை நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தங்களுக்கு முறையான அரசாங்க உதவிகள் கிடைக்கவில்லை என மக்கள் மத்தியில் அதிருப்தியும் ஏமாற்றமும் அதிகரித்துள்ளது.
இந்த இயற்கை பேரிடரில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 1,700-ஐக் கடந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)