மலாக்கா, மே 10 (பெர்னாமா) -- பல்வேறு இனங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைப்பதற்கும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்குமான ஒரு முக்கியத் தளமாக ஒருமைப்பாட்டு வாரக் கொண்டாட்டம் மிகப்பெரியத் தாக்கத்தை வழங்கியது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த முதன்மை திட்டம் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவதற்கான வாய்ப்பை வழங்கியிருப்பதாக ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் தெரிவித்தார்.
''இந்தக் கொண்டாட்டத்தின் மூலம், பல்வேறு இனங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளைச் சேர்ந்த மக்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க முடியும் என்று நாங்கள் நம்புவோம்,'' என்றார் அவர்.
நேற்று சனிக்கிழமை, மலாக்காவில் உள்ள பண்டார் ஹிலிர், சுதந்திர பிரகடன நினைவுச் சதுக்கத்தில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு தெற்கு மண்டல ஒருமைப்பட்டு வாரக் கொண்டாட்டம் மற்றும் தேசிய சமூக பழஞ்சுவடி காப்பக விழாவைத் தொடக்கி வைத்தப் பின்னர், செய்தியாளர்களிடம் டத்தோ ஏரன் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
சம்பந்தப்பட்ட திட்டத்தின் ஆற்றலை குறிப்பாக அதற்கான வரவேற்பு மற்றும் ஏற்புடைத்தன்மையை மதிப்பிடுவதற்காக, அமைச்சரவை எப்போதும் நிகழ்ச்சிக்கு பிந்தையை ஆய்வுகளையும் பகுப்பாய்வுகளையும் மேற்கொள்வதை அவர் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)