Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

தமிழகத்தின் 232 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

11/05/2026 08:16 PM

சென்னை, 11 மே (பெர்னாமா) -- தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்கிய வேளையில், 232 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

233 சட்டமன்ற உறுப்பினர்களில், சிவி சண்முகத்தை தவிர்த்து, இதர உறுப்பினர்கள் அனைவரும், தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில், பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இந்திய நேரப்படி காலை மணி 9.30 க்கு தொடங்கிய பதவியேற்பு சடங்கு தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

இதில், பெர்ம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக, முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

அதோடு, திராவிட முன்னேற்றக் கழகம், தி.மு.க சட்டமன்ற குழு தலைவராக எதிர்கட்சி தலைவர் உதயநிதி பதவியேற்றார்.

ஒவ்வொரு தொகுதி தலைவர்களின் பெயரும் அழைக்கப்பட்டதும், அவர்கள் முறையே தங்களின் பதவி உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

எனினும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அதிமுக-வை சேர்ந்த சி.வி.சண்முகம் சட்டமன்றக் கூட்டத்திற்கு வருகை புரிந்திருந்த போதும், அவரின் பெயர் அழைக்கப்பட்டபோது, பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளாமலேயே அங்கிருந்து புறப்பட்டார்.

இதனிடையே, , தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் களம் கண்ட ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

சபாநாயகர் தேர்வான பிறகு தற்காலிக சபாநாயகர் தமது பதவியில் இருந்து விலகுவார்.

இக்கூட்டத்திற்குப் பின்னர், சென்னை, ஆல்வார்பேட்டையில் உள்ள முன்னால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் அவரைச் சந்திக்கச் சென்ற விஜயை உதயநிதியும் ஸ்டாலினும் ஆரத்தழுவி வரவேற்றன.

பின்னர், அவர்கள் மூவரும் சில நிமிடங்கள் அலவலாவினர்.

அதைத் தொடர்ந்து, சில அரசியல் கட்சி தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)