கான் யூனிஸ், 25 ஏப்ரல் (பெர்னாமா) -- நேற்று காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்.
கான் யூனிஸ்-இன் அல்-மவாசி பகுதியில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட எட்டுப் பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் காசா பொது தற்காப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பலியானவர்களில் இருவர் போலீஸ் அதிகாரிகள் என்று காசாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவின் பெய்ட் லஹியா பகுதியில், கமால் அட்வான் மருத்துவமனைக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
அதில் ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
அடுத்து, மூன்றாவது தாக்குதலில், மற்றொரு போலீஸ் ரோந்து படை மீது குறிவைக்கப்பட்ட நிலையில், இருவர் கொல்லப்பட்டதோடு இருவர் காயமடைந்தனர்.
இதில் மேலும் இரு போலீஸ் அதிகாரிகள் பலியானதாக உறுதிப்படுத்தப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)