Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

எரிசக்தி தளங்கள் மீது ஈரான் தாக்குதல்; இந்தியா கண்டனம்

20/03/2026 12:11 PM

புது டெல்லி, 20 மார்ச் (பெர்னாமா) -- மத்திய கிழக்கு முழுவதும் உள்ள எரிசக்தி தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களை இந்தியாவும் கடுமையாக கண்டித்திருக்கிறது.

வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரண்டிர் ஜைஸ்வா தெரிவித்திருக்கிறார்.

''எனவே, இந்த வட்டாரங்கள் (வளைகுடா நாடுகள்) முழுவதும் வெவ்வேறு இடங்களில் உள்ள எரிசக்தி ஆலைகள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிகுந்த கவலையை அளிப்பதோடு, ஏற்கனவே நிச்சயமற்ற நிலையில் உள்ள உலகளாவிய எரிசக்திச் சூழலை மேலும் சீர்குலைக்கவே செய்கின்றன. இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.  அவை நிறுத்தப்பட வேண்டும்,'' என்றார் அவர். 

கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக நீடிக்கும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரினால், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்ததோடு உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

அண்மையில், ஈரானின் வான்வழித் தாக்குதல்கள் கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]