Ad Banner
 விளையாட்டு

ஜெர்மனி கிண்ண இறுதி போட்டிக்கு முன்னேறியது பாயன் முனிக்

23/04/2026 06:44 PM

ஸ்டுட்கார்ட், 23 ஏப்ரல் -- ஜெர்மனி கிண்ண காற்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில், பாயர் லெவர்குசனை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியன் வழி, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பாயன் முனிக் முதன் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

ஹரி கேன்மற்றும் லுயிஸ் டியாஸ் அடித்த கோல்கள் தலைமையிலான  அணியின் வெற்றியை உறுதி செய்திருக்கின்றன. 

ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் பாயன் முனிக்கான முதல் கோலை Harry Kane மிக லாவகமாக போட்டார். 

அது, இப்பருவத்தில் அவர் அடித்த ஏழாவது கோலாகும்.

அண்மையில் தங்களின் லீக் பட்டத்தை உறுதிப்படுத்திய பாயன் முனிக், இந்த ஆட்டத்தையும் முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 

அதன் பலனாக டியாஸ் வழி, பாயன் முனிக் இரண்டாவது கோலை அடித்தது.


-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)