தெஹ்ரான், 21 ஏப்ரல் (பெர்னாமா) -- அச்சுறுத்தலின் கீழ் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையையும் நடத்த முடியாது என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அதிபர் டோனல்ட் டிரம்பின் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள், ஏற்கனவே பலவீனமாக இருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஈரான் நாடாளுமன்றத் தலைவர் முஹமட் பாகர் காலிபாஃப் தெரிவித்தார்.
அமெரிக்கா இத்தகைய நடவடிக்கைகள் மூலம் அழுத்தம் கொடுத்து பேச்சுவார்த்தைக்குக் கட்டாயப்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது.
முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் சூழ்நிலை, எதிர்காலத்தில் மோதலுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
பாகிஸ்தான் முன்னெடுத்த இரண்டு வார போர்நிறுத்தம் இந்த வாரம் முடிவுக்கு வந்தால், புதிய ராணுவ திட்டங்களைத் தயார் செய்து வைத்துள்ளதாக ஈரான் கூறுகிறது.
கடந்த வாரம் முதல், ஈரான் துறைமுகங்களில் நுழையும் மற்றும் வெளியேறும் கப்பல்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளைத் தொடர்ந்து அமல்படுத்தி வருகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)