ஜாலான் துன் ரசாக், 21 ஏப்ரல் (பெர்னாமா) -- மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடியின் தாக்கங்களைச் சமாளிக்க அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே, அதன் பல்வேறு தலையீடுகளும் உதவித்தொகை அமலாக்கங்களும் ஆகும்.
அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே தெரிவித்தார்.
''இப்படித்தான் அரசாங்கம், அதன் நலன்களை மக்களுக்காக வழங்குகிறது. அதனால் மக்கள், சிரமத்தை உணர மாட்டார்கள். அதனால்தான், இன்று மலேசியர்கள், உலகம் முழுவதிலும் உள்ளவர்கள், அதன் தாக்கத்தை உணர்ந்துள்ளனர். ஆனால், மலேசியாவில் அதன் தாக்கம் அவ்வளவு இல்லை. நன்றாகவே செயல்படுவது போல் தெரிகிறது. இல்லையா? ஏன்? ஏனென்றால், தலையீடுகளுக்கு உதவ எங்களிடம் நிறைய அரசாங்க மானியங்கள் உள்ளன. ரஹ்மா விற்பனையைப் போல, விலைக் குறைவாக இருப்பதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், நாங்கள் தள்ளுபடிகளையும் வழங்குகிறோம்'', என்றார் அவர்.
இன்று, விஸ்மா பெர்னாமாவில் 'உலகளவில் இருந்து உள்நாடு வரையில்: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்க முயற்சிகள்' என்ற தலைப்பில் பெர்னாமா வானொலியில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்டு விவாதித்தபோது டாக்டர் ஃபுசியா சாலே அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)