ஜாலான் டூத்தாமாஸ் 2, 21 ஏப்ரல் (பெர்னாமா) -- தொழில்நுட்ப வளர்ச்சியைத் தொடர்ந்து, மலேசியாவும் ஆசியான் நாடுகளும் தங்களின் பாதுகாப்பு உத்திகளை மேலும் வலுப்படுத்துவதோடு, அதன் அடிப்படையில் மற்றும் நவீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் தயாரக வேண்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ, தன்னியக்க அமைப்பு மற்றும் BIOTEKNOLOGI எனப்படும் உயிரியல் தொழில்நுட்பம் போன்ற புதிய தொழில்நுட்பங்களின் விரைவான வளர்ச்சியால் இந்த தேவை அவசியமாவதாக, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் கூறினார்.
இவை நவீன உலகை முழுமையாக மாற்றுவது மட்டுமின்றி சீர்குலைவை ஏற்படுத்தும் ஆற்றலையும் கொண்டிருப்பதை டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் சுட்டிக்காட்டினார்.
"இவை எதிர்கால இராணுவ நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் இராணுவ சக்தியை மறுவரையறை செய்து, பாரம்பரிய தளங்களிலிருந்து கவனத்தை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட தன்னியக்க அமைப்புகளுக்கு மாற்றுகிறார்கள். முக்கியமாக, அவற்றின் ஒன்றிணைப்பு முற்றிலும் புதிய முன்மாதிரிகளையும் திறன்களையும் உருவாக்குகிறது", என்றார் அவர்.
இன்று கோலாலம்பூரில், 2026 ஆசிய தற்காப்புச் சேவை, டி.எஸ்.எ மற்றும் ஆசியாவின், தேசிய பாதுகாப்பு கண்காட்சி, NATSEC ஆகியவற்றுடன் இணைந்து நடைபெற்ற புத்ராஜெயா கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர், அவர் அதனை கூறினார்.
எனினும், தீவிரமான மோதல்களைச் சமாளிக்க, உயர் தொழில்நுட்ப இராணுவ சொத்துகளை மட்டும் சார்ந்திருப்பதும் போதுமானதாக இருக்காது என்று முஹமட் காலிட் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)