Ad Banner
 உலகம்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பாகிஸ்தான் கடமையைத் தொடரும்

20/04/2026 06:29 PM

லூசியானா, ஏப்ரல் 20 (பெர்னாமா) -- ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் மத்தியஸ்தராக தனது கடமையைத் தொடர்வதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளதை, பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் நேற்று திட்டவட்டமாக கூறினார்.

வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள அண்மைய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, நேற்றிரவு ஷெஹ்பாஸ் ஷெரீஃப், ஈரான் அதிபர் Masoud Pezeshkian உடன் 45 நிமிடம் தொலைப்பேசியில் உரையாடினார்.  

கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஈரானும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன.

அதனைத் தொடர்ந்து கிழக்கு ஆசிய அமைதிக்கான அரச தந்திர முயற்சியாக, Shehbaz, கடந்த வாரம் சவூதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். 

இதனிடையே, இரு நாடுகளின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் பாகிஸ்தான் தலைமை தளபதி Fil Marsyal Syed Asim Munir மூன்று நாள் பயணமாக ஈரானில் உள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)