Ad Banner
 விளையாட்டு

ஸ்டுட்கார்ட்: பட்டத்தை வென்றார் ரய்பாக்கினா

20/04/2026 06:46 PM

ஜெர்மனி, ஏப்ரல் 20 (பெர்னாமா) -- ஸ்டுட்கார்ட் பொது டென்னிஸ் போட்டி...

இரண்டாம் நிலை வீராங்கனையான எலினா ரய்பாக்கினா 7-5, 6-1 என்ற புள்ளிகளில் கரோலினா முச்சோவாவை தோற்கடித்து தமது அபார ஆட்டத்திறனை நிரூபித்துள்ளார்.

அதோடு, வெற்றியாளருக்கான பரிசான போர்ஷெ ரக காரையும் வென்றுள்ளார்.

ஜெர்மனி, ஸ்டுட்கார்ட்டில் உள்ள Weissenhof டென்னிஸ் கிளப்பில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், ரய்பாக்கினா கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலாம் செட்டை 3-0 என்ற புள்ளிகளின் வழி முன்னிலை வகித்தார்.

எனினும், 2-5 என்று பின் தங்கி இருந்த செக் குடியரசின்கரோலினா முச்சோவா, தொடர் முயற்சியின் வழி, 5-5 என்ற நிலையில் சமநிலைப்படுத்தினார்.

எனினும், அவர் செய்த சிறு தவறுகளினால், முதலாம் செட் ஆட்டம் Rybakina-விற்கு சாதகமாக அமைந்தது.

இரண்டாம் செட்டில், இதே நிலை நீடித்து, முச்சோவாa ஒரே புள்ளியை மட்டும் பெற்ற வேளையில், ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து 6-1 என்ற புள்ளிகளில் ரய்பாக்கினா, இப்பருவத்தின் தமது 25-வது வெற்றியை உறுதி செய்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)