கோப்பேங், 16 ஏப்ரல் (பெர்னாமா) -- பேராக் மாநிலத்தின் கோப்பேங் மற்றும் பங்கோர் தமிழ்ப்பள்ளிகளுக்கான கட்டுமான பணிகள் மாநில அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவை 22 மாதங்களில் நிறைவுபெறும் என்று அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.
அக்கட்டுமானப் பணிகள் நிறைவுபெறும் பட்சத்தில், அனைத்து வசதிகளுடனும் மாணவர்கள் அங்கு கல்வி கற்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இன்று கோப்பேங்கில் உள்ள ஆர்.டி.சி மண்டபத்தில் நடைபெற்ற பேராக் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் 32- வது ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் டத்தோ சிவநேசன் செய்தியாளர்களிடம் பேசினார்.
பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளி்ன தேவைகளுக்கு மாநில அரசாங்கம் தொடர்ந்து தேவையான உதவிகளை வழங்கி வருவதாக அவர் மேலும் கூறினார்.
இதனிடையே, பேராக் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்திற்கு இவ்வாண்டு, மாநில அரசாங்கம் 40,000 ரிங்கிட் மானியம் வழங்கியதாக அதன் தலைவர் எஸ். ஜெயகுமார் தெரிவித்தார்.
பணி ஓய்வு பெற்ற 11 தலைமையாசிர்களுக்கு இந்நிகழ்ச்சியில் சிறப்புச் செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]